நாசிக் மராட்டியத்தில் 16 நாட்களில் 29 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது மக்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று 2 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கையின்படி, அதிகாலை 5.06 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆகவும், பின்னர் மதியம் 12.40 மணி அளவில் 3 ஆகவும் நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வுகள் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தின் பெத், சுர்கானா மற்றும் திண்டோரி ஆகிய தாலுகாக்களின் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 29 முறை எனினும், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. மராட்டியத்தில் ஜூலை 30 முதல் ஆகஸ்டு 14 வரையிலான கடந்த 16 நாட்களில் 29 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அடிக்கடி சிறிய நிலஅதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன. இவற்றில் 24 நிலநடுக்கங்கள் நாசிக் நகரை சுற்றியும், பால்கரில் 4 நிலநடுக்கங்களும், நாக்பூரில் ஒரு நிலநடுக்கமும் பதிவாகி உள்ளன. இதன்படி கடந்த மாதம் 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், அதனைதொடர்ந்து இந்தமாதம் 6, 8, 10 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் நாசிக்கில் நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன. பேராசிரியர் எச்சரிக்கை இவற்றில், கடந்த 8-ந்தேதி ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி இருந்ததே பெரிய அளவிலான நிலநடுக்கம் ஆகும். அது 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், மேற்பரப்பில் நிலநடுக்கத்தின் அதிர்வு நன்றாக உணரப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்கள் உடனடியாக கட்டிடங்களில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இதுபற்றி நிலநடுக்க நிபுணரான ஐ.ஐ.டி. பாம்பேவின் பேராசிரியர் தீபங்கர் சவுத்ரி கூறும்போது, ஒரே பகுதிக்குள் சிறிய அளவில் அதேநேரத்தில், அதிக எண்ணிக்கையிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் அடிக்கடி இதுபோன்று நிலநடுக்கங்கள் பதிவாகி இருப்பது உண்மையில் எச்சரிக்கைக்கான விசயம் என கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/29-earthquakes-in-16-days-in-maharashtra-professor-warns




