சென்னை, இன்று நடைபெறும் 27-து லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டிஎன்பிஎல் 8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. திருப்பூர் - சேலம் அதன்படி, டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 27-து லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது. டாஸ் இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, திருப்பூர் அணி முதலில் பந்து வீச உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-salem-wins-toss-against-tiruppur-elects-to-bat




