மதுரையில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து காந்தி அருங்காட்சியகத்தில் இன்று அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ''ஜெம் வீரமணி வழக்கில் திமுக அரசு அந்த விவகாரத்தைக் கையாண்ட விதம் தவறானது. திமுக இந்த விவகாரத்தில் அதிகமாக எதிர்வினையாற்றுவது, வழக்கில் ஏதோ தவறு இருப்பதைக் காட்டுகிறது. முன்னாள் அமைச்சர் ரகுபதி, 'தொடர்புடைய வீடியோ சரியாக இல்லை' எனக் கூறி கடந்து சென்றுள்ளார். வீரமணியைக் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரமணியை மிரட்டி பலர் பணம் பறித்துள்ளனர். இந்த விவகாரத்தில் காவல்துறையைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு உள்ளது. வீரமணி வழக்கை தவெக அரசு மறைக்க முற்பட்டது என, தான் கூறிய கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் என்னிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விளக்கம் அளிப்பார். வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜெம் வீரமணி திமுக ஆட்சியில் தகுதியற்றவர் என நிதித்துறையில் இருந்து நீக்கப்பட்டவர் பி.டி.ஆர். தற்போது கட்சியில் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை. தொகுதிக்குள் கூட அவர் செல்லாததால்தான் தேர்தலில் தோல்வியடைந்தார். எடப்பாடி பழனிசாமியின் சுயநலம் காரணமாக அதிமுகவில் இருந்த விசுவாசிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர். இதே நிலைமை இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவுக்கும் ஏற்படும். அதிமுகவும் திமுகவும் குடும்பச் சொத்தாக மாறிவிட்டது. தேவையான நேரத்தில் பாஜகவை எதிர்ப்போம். ஏற்கனவே வக்பு விவகாரம் மற்றும் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான விவகாரங்களில் பாஜகவை எதிர்த்துள்ளோம். பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறியதில் தாங்கள் இதுவரை உறுதியாக இருக்கிறோம். திமுகவை ஒழிக்க வேண்டும் என ஜெயலலிதா நினைத்தார்; அதை விஜய் செய்து காட்டுவார். பி.டி.ஆர் வீரமணி வழக்கில் கடந்த ஆட்சியில் எப்ஐஆர் பதிவு செய்ததே பேரம் பேசுவதற்காகத்தான். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்தவர்கள் ஏன் வீரமணியைக் கைது செய்யவில்லை. மின்வெட்டு தொடர்பான பிரச்னைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 3 மாதங்களில் மின்வெட்டு முழுமையாகச் சரி செய்யப்படும். மின்துறையில் எங்கெங்கு தவறுகள் உள்ளனவோ அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு வருகின்றன" என்றார். வீரமணி போக்சோ வழக்கு: ``விசாரணையை நீர்த்துப் போக போலீஸுக்கு சிக்னல் கொடுத்தது ஏன்?" - அப்பாவு கேள்வி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/fir-against-gem-veeramani-registered-for-purpose-of-bargaining-minister-nirmal-kumar




