ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள 'லிட்டில் கார்டன்' என்ற தனியார் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியைத் தாக்கியதில் 6 வயதான பிரணாய் தேஜா என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காலையில் ஆரோக்கியமாகப் பள்ளிக்குச் சென்ற தன் மகனை, ஆசிரியை பிரம்பால் தாக்கிய அதிர்ச்சியிலும் பயத்திலுமே சுருண்டு விழுந்து இறந்ததாகப் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். ஆசிரியர் தாக்கியதில் இறந்த மாணவன் பள்ளி சிசிடிவி காட்சிகளிலும் ஆசிரியை சிறுவனை அடிப்பதும், அடுத்த சில வினாடிகளில் அவன் சுருண்டு விழுவதும் பதிவாகியிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த துயரச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த கல்வித்துறை மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது. TN Assembly: "Fair Delimitation Vs Freeze Delimitation அமைச்சர் ஆதவ் அர்ஜூனா - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மோதல்|Live முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/6-year-old-child-dies-after-being-slapped-by-teacher




