ஈரோடு, ஈரோடு மாவட்டம், தாளவாடி, ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட காமையன்புரம் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலியானார். மஞ்சள், உருளைக்கிழங்கு மக்காச்சோளம் சாகுபடி ஈரோடு மாவட்டம், தாளவாடி, ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட காமையன்புரம் கிராமத்தை சேர்ந்தவர் பசவசெட்டி (வயது 62). இவர் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார். தற்போது தன்னுடைய தோட்டத்தில் மஞ்சள், உருளைக்கிழங்கு மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளார். யானை மிதித்து விவசாயி பலி இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட விவசாயி டார்ச் லைட் அடித்து யானையை விரட்ட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென யானை விவசாயியை துரத்தி காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-killed-by-elephant-near-thalawadi




