பாட்னா, பீகாரின் கயா ஜி மாவட்டத்தில் உள்ள ரகு நகர் என்ற கிராமத்தில், பியூஷ் குமார் என்ற 3 வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். இது தொடர்பாக தகவல் அறிந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சுமார் 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவனை பத்திரமாக மீட்டனர். சிறுவனுக்கு சிறிய காயங்கள் இருந்ததாகவும், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆழ்துளை கிணறுகளை முறையாக பராமரிக்காமலும், மூடி வைக்காமலும் இருப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/bihar-a-3-year-old-boy-who-fell-into-a-borehole-was-rescued-safely




