சென்னை, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதனால், காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 72 பேருக்கு ரெயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும். தெற்கு ரெயில்வே இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜூலை 17-ந் தேதி (இன்று) முதல் ஜூலை 30-ந் தேதி வரை தற்காலிகமாக ஒரு தூங்கும் வசதி முன்பதிவு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது. சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இதே நடைமுறை ஜூலை 17-ந் தேதி (இன்று) முதல் ஜூலை 31-ந் தேதி வரை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/an-additional-sleeper-coach-has-been-attached-to-the-nagercoil-coimbatore-express-train




