யுஜின், உலக ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் யுஜின் நகரில் கடந்த 5 நாட்கள் நடந்தது. இதில் கடைசி நாளில் நடந்த பெண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி சுற்றில் 19 வயது இந்திய வீராங்கனை பூஜா 1.84 மீட்டர் உயரம் தாண்டி 7-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தார். அவர் 1.87 மீட்டர் உயரத்தை தாண்ட எடுத்த 3 முயற்சியும் தோல்வியில் முடிந்தது. கடந்த மே மாதம் நடந்த ஆசிய ஜூனியர் போட் டியில் 1.93 மீட்டர் தூரம் தாண்டி தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற பூஜா அந்த உயரத்தை மீண்டும் எட்டியிருந்தால் அவரது கழுத்தை பதக்கம் அலங்கரித்து இருக்கும். ஆஸ்திரேலிய வீராங்கனை இசோபெல் லூயிசன் ரோ (1.92 மீட்டர்) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென் றார். ஹங்கேரியின் லிலியானா படோரி (1.90 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், ஸ்பெயினின் ஐடானோ அலோன்சா (1.90 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர். பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பூமிகா நெஹாடே, தஹூரா காதுன். தனு சவுத்ரி, தியா ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி (3 நிமிடம் 31.39 வினாடி) 9-வது மற்றும் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/world-junior-athletics-disappointment-for-indian-athlete




