சென்னை, டெக்பால் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் குயின்சி அரையிறுதியில் தோல்வியடைந்தார். போராடி தோல்வி 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் குயின்சி, இந்தோனேசியாவின் சுமையாவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை குயின்சி 12-7 என்ற கணக்கில் கைப்பற்றி சிறப்பான தொடக்கம் கொடுத்தார். ஆனால் அடுத்த 2 செட்களிலும் சுமையா ஆதிக்கம் செலுத்தினார். 2-வது செட்டை 12-9 என்றும், 3-வது செட்டை 12-7 என்றும் கைப்பற்றிய சுமையா, ஆட்டத்தை 2-1 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். வெண்கலத்துக்கு வாய்ப்பு அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் குயின்சிக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு இன்னும் உள்ளது. நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜப்பானின் யுய்னா சகாமோட்டோவை குயின்சி எதிர்கொள்கிறார். கலப்பு இரட்டையர் முன்னதாக நேற்று நடைபெற்ற டெக்பால் கலப்பு இரட்டையர் 'ரிப்பேசார்ஜ்' போட்டியில், குயின்சி டிசௌசா - முகமது அனாஸ் இம்ரான் பெக் ஜோடி வெற்றி பெற்றது. இந்திய ஜோடி, பிலிப்பைன்ஸின் அபுலென்சியா ஜோஹானா - அகஸ்டின் பிரின்ஸ் ஜோடியை 12-3, 12-6 என்ற செட் கணக்கில் 2-0 என வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேறியது. இதனால் குயின்சிக்கு பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் என இரு பிரிவுகளிலும் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/quimcy-dsouza-loses-the-teqball-womens-singles-semi-final-at-the-asian-games




