திருச்சி, இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 17-ந் தேதி (திங்கட்கி ழமை) காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அவர் திருச்சியில் இருந்து கார் மூலம் திருவாரூர் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பிறகு அங்கிருந்து தஞ்சை செல்லும் அவர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அன்றைய தினம் மாலையே கார் மூலம் திருச்சி வந்து மீண்டும் விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-trichy-on-the-17th




