மும்பை, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி 'நீட்' நுழைவு தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பியது. இந்த தேர்வு முறைகேட்டுக்கு எதிராக, டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த மாதம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஒரு மாத காலம் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள இளைய தலைமுறையினர் மற்றும் மாணவர்களின் பேராதரவோடு நடந்த இந்த போராட்டத்தின் எதிரொலியாக, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். உயர்மட்ட குழு கூட்டம் இந்தநிலையில் கட்சியின் எதிர்கால திட்டங்கள், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிப்பதற்கான அவசர உயர்மட்ட குழு கூட்டம் வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜீத் திப்கேவின் இல்லத்தில் இந்த முக்கிய கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத் திற்கு வரும்போது, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, புதிய ஆலோசனைகளுடன் வருமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அன்று மாலையே செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/cockroach-janata-party-high-level-committee-meeting-on-5th-important-decision-on-future-plans




