சிவகாசி, கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்தது. அந்த மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். அங்கு ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவகாசி போஸ் காலனியை சேர்ந்த விஸ்வமணி (25 வயது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. வாலிபரும், மாணவியும் பலமுறை தனிமையில் சந்தித்துள்ளனர். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். தடுமாறி விழுந்தார் சம்பவத்தன்று பள்ளியில் இருந்து மாணவி வீடு திரும்பியபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மாணவியின் வயிற்றில் கடும் வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரது பாட்டி அழைத்து சென்றார். மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீட்டில் வைத்து மாணவிக்கு குறைபிரசவம் ஆனதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மாணவியையும், சிசுவையும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிசுவை பரிசோதனை செய்தபோது இறந்துவிட்டது தெரிய வந்தது. போக்சோ சட்டத்தில் வழக்கு இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் காதலனான விஸ்வமணி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tenth-grade-girl-delivery-after-fall-baby-dies-pocso-case-on-lover




