திருவனந்தபுரம், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், திருச்சூர் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கேரளாவில் கனமழை கேரள மாநிலம் திருச்சூர், இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு திருச்சூர், எர்ணாகுளம், வயநாடு உட்பட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆர்ப்பரிக்கும் நீர்வரத்து இந்த நிலையில் சாலக்குடி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அதிரப்பள்ளி மற்றும் சார்ப்பா நீர்வீழ்ச்சிகளில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அதிகப்படியான நீர்வரத்து மற்றும் அணை திறப்பு காரணமாக சுற்றுலா பயணிகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு எச்சரிக்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதைகள் வழுக்கும் தன்மையுடன் இருப்பதால், ஆற்றின் கரையோரங்களுக்கு செல்லவோ அல்லது குளிக்கவோ கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முற்றிலும் தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மலைப்பிரதேசங்கள், நீர்நிலைகள் மற்றும் பிற நீர்வீழ்ச்சிகளுக்கான சுற்றுச்சூழல் சுற்றுலா வழித்தடங்களை மறு உத்தரவு வரும் வரை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக பொன்முடி, நெல்லியம்பதி போன்ற மலைக் கிராமங்களுக்கும், ஆபத்தான நீர்நிலைகளுக்கும் மாலை நேரப் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/kerala-the-roaring-athirappilly-waterfalls




