திண்டுக்கல், மதுரை அணி திண்டுக்கல் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டிஎன்பிஎல் 10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்று வரும் 15வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் - மதுரை அணிகள் மோதி வருகின்றன. மழை காரணமாக இப்போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டநிலையில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மதுரை அணி 171ரன்கள் குவிப்பு அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணிக்கு தொடக்க வீரர் ராம் குமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 40 ரன்கள் விளாசினார். என்.எஸ். சதுர்வேத் 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதீக் உர் ரஹ்மான் 19 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். திண்டுக்கல்லுக்கு 172 ரன்கள் இலக்கு இறுதியில் மதுரை அணி 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் களமிறங்க உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-ram-kumars-explosive-batting-madurai-sets-a-target-of-172-runs-for-dindigul




