கவுகாத்தி, அசாம் மாநிலம் கூச்சர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் காரில் கடந்த 3ம் தேதி இரவு 2 சிறுமிகளை கடத்தி சென்றுள்ளனர். பாலியல் வன்கொடுமை மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 2 சிறுமிகளை காரில் கடத்தி சென்ற இளைஞர்கள் காரில் வைத்து சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், சிறுமிகளை ஆள்நடமாட்டமற்ற பகுதியில் இறக்கி விட்டுள்ளனர். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அஜ்மல் ஹசன் லஷ்கர் (வயது 20), சதாம் ஹுசேன் லஷ்கர் (வயது 23), ரிங்கு தாஸ் (வயது 25) ஆகிய 3 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/shock-in-assam-gang-rape-of-girls-in-moving-car




