சென்னை, கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா- அமெரிக்க வீரர் பேபியானோ கருணா மோதினர். இது 2 கிளாசிக்கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும். கிளாசிக்கல், ராபிட், பிலிட்ஸ் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா, நடப்பு சாம்பியன் பேபியானோ கருவானாவை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார். இந்த நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில், அபாரமான மனஉறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க திரு.பிரக்ஞானந்தா அவர்களை மனமார வாழ்த்துகிறேன். என தெரிவித்துள்ளர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/chief-minister-vijay-congratulates-praggnanandhaa




