மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்கவேண்டும் என்றும், மராத்தி தெரியாத ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில போக்குவரத்து துறை அறிவித்தது. அதோடு போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலைகளில் இறங்கி ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களின் மராத்தி புலமையைத் தெரிந்து கொள்ள சோதனை நடத்தினர். மராத்தி சரியாகத் தெரியாத 4 ஆயிரம் டிரைவர்களுக்கு இதுவரை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இச்சோதனையால் வடமாநில ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் மும்பையைக் காலி செய்ய ஆரம்பித்தனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். ஆட்டோ ஓட்டுனர்கள் இரண்டு நாட்கள் மும்பையில் போராட்டமும் நடத்தினர். இதையடுத்து இவ்விவகாரத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலையிட்டு ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்ள் அடிப்படை மராத்தி கற்றுக்கொள்ள ஒரு ஆண்டு அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். பாஜக தலைமையிலான ஆட்டோ மற்றும் டாக்சி போக்குவரத்து தொழிற்சங்கத் தலைவர் ஹாஜி அர்பத் ஷேக் தலைமையிலான ஆட்டோ மற்றும் டாக்சி தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசைச் சந்தித்து பேசினர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், "வணிக ரீதியான பயணிகள் வாகன ஓட்டுநர்கள் பயணிகளுடன் அடிப்படை மராத்தியில் உரையாடுவதை உறுதி செய்யும் அரசின் நோக்கத்திற்கு ஓட்டுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓட்டுநர்கள் மராத்தியைக் கற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர். இருப்பினும், அவர்கள் வெவ்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, முறையான கல்வியைப் பல ஆண்டுகளுக்கு முன்பே முடித்தவர்கள். அவர்கள் மராத்தியைக் கற்றுக்கொள்ள கூடுதல் அவகாசம் கோரி இருந்தனர். `மராத்தி தெரியாவிட்டால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் லைசென்ஸ் ரத்து'- புது கெடுவால் டிரைவர்கள் அதிர்ச்சி எனவே அவர்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மராத்தி மொழி தெரியாத ஓட்டுநர்கள் மீது இக்காலகட்டத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது'' என்று பட்னாவிஸ் தெளிவுபடுத்தினார். பயணிகளுடனான அன்றாட உரையாடல்களுக்குத் தேவைப்படும் பொதுவான சொற்றொடர்களை ஓட்டுநர்கள் கற்றுக்கொள்ள உதவும் வகையில், மராத்தி மொழி வகுப்புகளை நடத்தவும், அதற்கான பாடக்குறிப்புகளை வழங்கவும் அரசு தற்போது முடிவு செய்துள்ளது. பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அடிப்படை மராத்தி மொழித் திறன் அவசியம் என்ற அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் அதே வேளையில், ஓட்டுநர் சங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்க முதலமைச்சரின் தலையீடு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சிகள் மண்ணின் மைந்தர்கள் கோரிக்கையைக் கையில் எடுத்து மும்பை மாநகராட்சி தேர்தலைச் சந்தித்தது. அதனை எதிர்கொள்ள துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவைக் கொண்டு வந்தார். `மராத்தி கட்டாயம்' - ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தால் மும்பை மக்கள் பாதிப்பு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/trending/maharashtra-government-grants-auto-and-taxi-drivers-one-year-to-learn-marathi




