சென்னை, இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பணியை கௌரவிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நாடாளுமன்ற அவையில் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. திரைத் துறையில் 50 ஆண்டு கால சாதனைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிட்டு இளையராஜாவை கவுரவித்துள்ளது ஆஸ்திரேலிய நாடாளுமன்றம். இதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்து பேசும் காணொலியை இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘எனது 50 ஆண்டு கால இசைப் பயணத்தை சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டின் மூலம் நினைவுகூரச் செய்ததற்கு விக்டோரியன் அரசாங்கத்தின் நிதி மந்திரி என்வர் எர்டோகன் எம்பி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டது மனதினைத் தொடுவதாக உள்ளது. இந்த நேரத்தில் என்னுடைய இசைக்கு உயிர் கொடுத்த எண்ணற்ற மக்கள், என்னுடன் இணைந்து பயணித்த கலைஞர்கள், என் பாடல்களை ரசித்துக்கொண்டிருக்கும் அனைத்து தலைமுறையினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்’ என தெரிவித்துள்ளார். 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில், சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவில் பங்கேற்க இந்தியா சார்பில் ‘கோந்தல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இசை இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ilayaraja-honored-in-australian-parliament




