திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற ( தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க தரப்பில் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ள வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட மூலனூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொண்டர்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசியதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். ஒருவேளை, அவரது போச்சைக் கேட்காமல் பார்க்காமல் சிலர் தவற விட்டிருந்தால் கவலைப்பட வேண்டாம். நாளை அவர் பேசும்போதும் நிச்சயமாக அவர் அதையேதான் மீண்டும் பேசுவார். மீண்டும் மட்டுமல்ல மீண்டும் மீண்டும் தி.மு.க-வைப் பற்றி மட்டுமேதான் பேசுவார். இரண்டே இரண்டுக்கு இடையில்தான் போட்டி என்றார். அது உண்மைதான். உதயநிதி ஸ்டாலின் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி. முதலமைச்சர் தொகுதியிலே மின்சாரம் இல்லாத நிலைதான் இன்றைய தமிழ்நாட்டில் இருக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் தற்போது வரை ஏகப்பட்ட படுகொலைகள் நடந்திருக்கின்றன. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத முதலமைச்சர் தி.மு.க - வை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார். மதுராந்தகத்தில் அவர் பேசிய 30 நிமிடங்களில் 32 முறை தி.மு.க என்று பேசியிருக்கிறார். ஏனென்றால் அவருக்கு வேறு கன்டெனட் தெரியாது. அவருக்கு மட்டுமல்ல அவர்களின் அமைச்சர்களுக்கும் தெரியாது" என்றார். "விஜய்யின் தாயாரை பாஜக தலைவர்கள் தவறாகப் பேசினார்கள்; ஆனால்."- மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/election/udhayanidhi-stalin-tharapuram-campaign-about-tvk-vijay-speech




