சென்னை: ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சரசு. இவரின் மகன் அஜித் (28). இவர் வீட்டின் வாசலில் அமர்ந்து அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அஜித்தை சுற்றி வளைத்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அதைப்பார்த்த சரசு, அவர்களை தடுத்தார். இதில் சரசுக்கும் வெட்டு விழுந்தது. அஜித்தை வெட்டி சாய்த்த அந்தக் கும்பல் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டது. இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அஜித்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அஜித் இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், மர்ம கும்பலை விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சரசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் கஞ்சா விற்பனையும் இந்தக் கொலைக்கு ஒரு காரணம் என தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தில் பிரபல ரௌடி ஒருவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்ததையடுத்து அவரையும் அவரின் கூட்டாளிகளையும் போலீஸார் தேடி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/youth-murdered-in-chennai-in-front-of-his-mom



