நாளை முதல் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இனி பிப்ரவரி மாதம் வரை, இந்தியாவில் தொடர்ந்து பண்டிகை சீசன்தான். இதை முன்னிட்டு, தற்போது பங்குச்சந்தையில் எந்தெந்தத் துறைகளில் ஃபோக்கஸ் செய்யலாம் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “இந்தியாவில் பண்டிகை சீசனில் எந்தெந்தத் துறைகளுக்கு மக்களின் பணம் அதிக செல்லும் என்பதை சின்னக் கணக்குப் போட்டுப் பாருங்கள். அதில் நிச்சயம் ஆட்டோமொபைல் (கார், டூவீலர்கள்.), நகைக்கடைகள், எலெக்ட்ரானிக் பொருள்கள் (டிவி, வாஷிங் மெஷின், மொபைல் போன்.), FMCG (ஸ்வீட்ஸ், காரம், சாக்லேட்ஸ், பெர்சனல் கேர்.), பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்Gold: வீட்டில் கிலோ கணக்கில் தங்கம் இருக்கிறதா? வருமான வரித்துறை என்ன செய்யும்? ஜவுளித் துறை, பெயிண்ட்ஸ், நிதி நிறுவனங்கள்ஆகியவை இடம்பெறும். பண்டிகை என்பதால் நம் மக்கள் ஆட்டோமொபைல், நகைகள், எலெக்ட்ரானிக்ஸ், FMCG, ஜவுளி ஆகியவற்றை வாங்குவார்கள். பெயிண்ட்ஸ் - பண்டிகை காலத்திற்காக வீட்டை அலங்கரிப்பார்கள். வரவுக்கு மீறி செலவுகள் அதிகமாகும்போது, மக்கள் நிச்சயம் நிதி நிறுவனங்களை நோக்கி நகருவார்கள். இதனால், பங்குச்சந்தையில் இந்தத் துறைகளை நிச்சயம் கவனிக்கலாம். ஆனால், இந்தத் துறைகளை நீண்டகால முதலீடுகளாக இல்லாமல், குறிப்பிட்ட புள்ளிகளை நிர்ணயித்து அதற்குள் டிரேடிங் செய்தால் நல்ல வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/personal-finance/share-market/festive-season-2026-which-sectors-could-benefit-in-stocks




