தேவையான பொருட்கள்:- வெண்டைக்காய் - 25 (முத்தல் இல்லாதது) கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கடுகு - சிறிதளவு உளுந்தம் பருப்பு - சிறிதளவு கறிவேப்பிலை - 1 கொத்து பெரிய வெங்காயம் - 1 (பொடியாக வெட்டி வைத்தது) உப்பு - தேவையான அளவு மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (சிறியதாக வெட்டியது) தேங்காய் - 2 சில் அளவு (துருவியது) செய்முறை:- முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, துணியால் துடைத்துக்கொள்ளவும். அடுத்து வெண்டைக்காயை இரண்டாக கீறி, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். அடுத்து, கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைக்கவும். பாத்திரம் சூடாகியதும் அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடாகியதும், தாளிக்க கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்து, பொடியாக வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து, வெட்டி வைத்த வெண்டைக்காயை சேர்க்கவும். மிதமான சூட்டில், வெண்டைக்காயை 2 நிமிடம் வதக்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து வதக்கவும். அடுத்து மஞ்சள் பொடி, வெட்டிவைத்த மிளகாய், சீரகப்பொடி ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். நன்கு வதங்கியதும் நிறைவாக தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான வெண்டைக்காய் பொரியல் ரெடி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/sunday-special-how-to-make-delicious-okra-stir-fry




