திருப்பூர், திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்கேயே குளம்போல் தேங்கி நின்றது. உரிய திட்டமிடல் இல்லாமல் கால்வாய் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இது குறித்து ‘தினத்தந்தி’ யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கரைப்புதூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குளம் போல் தேங்கியிருந்த கழிவுநீர் அகற்றப்பட்டது. இதையடுத்து மக்கள் பிரச்சினைகளை செய்தியாக வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/disposal-of-stagnant-sewage-in-a-residence-near-tirupur




