தூத்துக்குடி, தூத்துக்குடியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4-வது தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 36), கூலித் தொழிலாளி. இவர் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மகளிர் போலீசில் புகார் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கைது செய்து சிறையில் அடைப்பு விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுரேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-arrested-under-pocso-act-for-sexually-harassing-10-year-old-girl




