நாகை, தவெகவில் இணைந்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக தலை ஞாயிறு காவல் நிலையத்தில் புகார் எழுந்துள்ளது குற்றச்சாட்டு நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள காடந்தேத்தி கிராமத்தில் வசிக்கும் அனைவரும் திமுக ஆதரவாளர்களாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலர் திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் பா.ஜ.க.வில் இணைந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, தங்களை ஊரில் உள்ள பெரும்பான்மையான கட்சியினர் ஒதுக்கி வைப்பதாகவும், தங்கள் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தரப்பினர் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்கும் மற்றவர்கள் பங்கேற்க அனுமதிப்பதில்லை என தெரிவித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். போலீஸில் புகார் இந்த நிலையில், காடந்தேத்தி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் தங்களை ஒதுக்கி வைப்பதாக கூறி, தலைஞாயிறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதற்கிடையே, விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் தங்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கோரி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளனர். கோரிக்கை மேலும், ஊர் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளிலும் தங்களை பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவிலும் தங்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும், தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, தங்கள் தரப்பில் யாருக்கும் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும், அவர்களாகவே ஒதுங்கிச் செல்வதாகவும் தெரிவித்தனர். மேலும், கோவில் நிர்வாகக் குழுவில் அவர்களது தரப்பைச் சேர்ந்த 4 பேர் இருப்பதாகவும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் காரணமாகவே கோவில் கும்பாபிஷேகத்தை தடுப்பதாக தங்கள் மீது குற்றம்சாட்டுவதாகவும் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/complaints-that-those-who-joined-the-thaweka-were-expelled-from-the-village-a-stir-in-nagaland




