இந்தியக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது, புதுச்சேரி காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது. காவல் துறையின் மிக உயரியதான அந்த விருதை கொடுப்பதற்காக, ஆகஸ்ட் 8, 9 என இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதன்படி 9-ம் தேதி காலையில் கோரிமேட்டு காவல்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை வழங்கினார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும், பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 80-வது சுதந்திரதின தேசியக் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், மாணவர்களும் தேசியக் கொடிகளுடன் அணிவகுப்புக்கு நின்று கொண்டிருந்தனர். அந்த மேடையில் ஏறிய அமித் ஷா, பேரணியை கொடி அசைத்து துவக்கி வைப்பதற்காக தேசியக் கொடியைக் கேட்டார். அப்போது அவர் அருகில் நின்று கொண்டிருந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பெரிய காவிக்கொடி ஒன்றை அமித்ஷாவிடம் கொடுத்தார். கொடி வந்துவிட்டது என்று அதைக் கையில் வாங்கிய அமித்ஷா, அது காவிக்கொடி என்று தெரிந்ததும் டென்ஷனானார். தொடர்ந்து, `தேசியக் கொடியைக் கொடுங்கள்’ என்று அவர் கடுகடுக்க, ஓடிச் சென்று தேசியக் கொடியை எடுத்து வந்து கொடுத்தார் நமச்சிவாயம். காங்கிரஸ் கட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், 2021 தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தவர். அதேபோல இவருக்கு உள்துறை பதவியை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், முதல்வர் ரங்கசாமி அனுப்பிய இலாகாப் பட்டியலை ஆளுநர் நிறுத்தி வைத்து தாமதப்படுத்தியதாக என்.ஆர்.காங்கிரஸார் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. டோஸ் விட்ட அமித் ஷா; சரணடைந்த `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டின்! - அரசியல் ஆட்டத்தை துவக்கிய ரங்கசாமி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/background-of-amit-shahs-annoyance-by-bjp-minister-hands-over-saffron-flag-instead-of-the-national-flag




