நாட்டிங்காம், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டி கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஸ்டர் லீ ஸ்டீரிட்டில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மான்செஸ்டரில் நடந்த 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் இடையி லான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று நடக்கிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/3rd-t20-india-wins-toss-elects-to-bowl




