தென்காசி, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலரை சரமாரியாக தாக்கிய வழக்கில், தலைமை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடியிருப்பு பகுதியில் தகராறு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக (ஏட்டு) பணிபுரிந்து வந்தவர் பொன்ராஜ் (வயது 40). அதே போலீஸ் நிலையத்தில் மீனா என்ற பெண் காவலரும் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நிமித்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பு அருகே கடந்த 9-ந்தேதி இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஏட்டு பொன்ராஜ், பெண் என்றும் பாராமல் சக பெண் காவலரான மீனாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் மீனா, கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸ் ஆய்வாளர் கிறிஸ்டி தீவிர விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலை பொன்ராஜை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எஸ்.பி அதிரடி நடவடிக்கை ஒரே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சக பெண் போலீசை, ஆண் தலைமை காவலர் தாக்கிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய போலீசே இது போன்ற செயலில் ஈடுபட்டதை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அசோக்குமார், தலைமை போலீஸ் பொன்ராஜை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இவர்களுக்கிடையேயான இந்த மோதலுக்குத் தனிப்பட்ட விரோதம் காரணமா அல்லது பணிச்சுமையால் ஏற்பட்ட வாக்குவாதமா என்பது குறித்து கடையநல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Tenkasi | TN Police | பெண் போலீசாருடன் தகராறு | தலைமை காவலர் கைது://t. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-chief-arrested-for-assaulting-female-police-officer-in-tenkasi




