புடாபெஸ்ட், ஐரோப்பிய நாடான செர்பியாவில் இருந்து போலாந்துக்கு சுற்றுலா பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 59 பேர் பயணித்தனர். பஸ் விபத்து - 12 பேர் பலி இந்நிலையில், பஸ் இன்று ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் அருகே மிசொகிரடெஸ் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/hungary-tourist-bus-overturns-12-killed




