திருவனந்தபுரம், கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதனால் கேரளா முழுவதும் தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரம்மாண்ட அத்தப்பூ கோலம் ஓணம் பண்டிகையின் முதல் நாளான அத்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு, உலக புகழ்பெற்ற திருச்சூர் வடக்குநாதன் கோவிலின் தெற்கு வாயில் பகுதியில் வண்ண மயமான மலர்களை கொண்டு பிரம்மாண்டமான அத்தப்பூ கோலம் அமைக்கப்பட்டுள்ளது. பல வண்ண மலர்கள் பல வண்ண மலர்களால் வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அத்தப்பூ கோலத்தின் கழுகு பார்வை காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை பார்ப்பதற்கே கண் கொள்ளா காட்சியாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள் இந்த பிரம்மாண்ட பூக்கோலத்தை காண்பதற்காக இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வடக்குநாதன் கோவில் வளாகத்தில் திரண்டனர். பாரம்பரிய உடைகளை அணிந்து வந்திருந்த இளைஞர்களும், பெண்களும் இந்த பூக்கோலத்தின் முன்பாக நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இன்று தொடங்கியுள்ள இந்த ஓணம் கொண்டாட்டங்கள், அடுத்த 10 நாட்களுக்கு கேரளா முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/onam-festival-celebrations-begin-in-kerala




