சென்னை, துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு விரைவாக பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. துணை வேந்தர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த சட்டத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தடையை ரத்து செய்து, இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அப்போது, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, துணை வேந்தர் நியமனங்களை மேற்கொள்ள மாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசும் உத்தரவாதம் அளித்தது. இந்த நிலையில், வெங்கடாஜலபதி தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. தீர்வு காண வேண்டும் அதேபோல, தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிகளை நிரப்ப ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் அதிகார குழுவை நியமிக்க கோரி செங்கல்பட்டைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கையும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது மனுதாரர் பாஸ்கர் தரப்பில், "மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் இல்லை. இதனால், கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்க முடியவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் பல்கலைக்கழக பணிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளன. இதற்கு தீர்வு காண வேண்டும்" என்று வாதிடப்பட்டது. சட்டம் அமலில் உள்ளது தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, "சுப்ரீம் கோர்ட்டில் அரசு அளித்த உத்தரவாதம் காரணமாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் முடங்கியுள்ளது, இதற்கு தீர்வு காணும் வகையில் தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்ய தமிழக அரசை அனுமதிக்க வேண்டும். துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த சட்டம் இன்னும் அமலில் உள்ளதாகவே கருத வேண்டும். அந்த சட்டத்தின் அடிப்படையில் துணை வேந்தர்கள் நியமனம் மேற்கொள்ள அனுமதித்தால் மகிழ்ச்சி" என்று கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பு விரைவாக பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-verdict-soon-in-case-related-to-appointment-of-vice-chancellors




