பென்னாகரம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பரிசல் இயக்க 10-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீடிப்பதால், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பரிசல் இயக்க தடை கரையோரப் பகுதிகளில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 10-வது நாளாக தொடர்கிறது. இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். எனினும் அருவிகளில் குளிக்கத் தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-in-hogenakkal-cauvery-river-increases-ban-on-parisal-operation-for-10th-day




