ஈரோடு, ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவரு டைய மனைவி வனிதா (வயது 35) விவசாயி. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அறச்சலூர் சந்தைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் மொபட்டை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், தம்பதியை வழிமறித்து, வனிதா கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத் தில் தப்பி சென்றனர். இதைத்தொடர்ந்து வனிதா இதுகுறித்து அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து, வனிதாவிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-couple-waylaid-4-sovereign-gold-chain-snatched




