லண்டன், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. பர்மிங்கம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 258 ரன்களுக்கு ஆல் அவுட் அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 259 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். ரோகித், கோலி ஏமாற்றம் நீண்ட இடைவெளிக்குப்பின் இந்திய அணியில் இடம்பெற்ற ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோகித் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அவரும் நீண்ட இடைவெளிக்குப்பின் அணியில் இடம்பெற்றதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். ரோகித் சர்மாவும், விராட் கோலியும் அடுத்தடுத்து அவுட் ஆனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போதைய நிலவரப்படி இந்தியா 13 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. கில் 34 ரன்களிலும், ஸ்ரேயாஷ் 12 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றிபெற இன்னும் 188 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/rohit-and-kohli-continue-to-disappoint-with-another-early-exit




