சேலம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; "தமிழ்நாடு முதல்-அமைச்சர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தமிழக முதல்-அமைச்சர் தவிர்க்க வேண்டும். காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்ற தீர்ப்பை கர்நாடகா கடைபிடிக்கவில்லை. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை தீர்வு தராது. அதிமுக ஆட்சியில் பல்வேறு தீர்ப்புகள் மூலம் தண்ணீர் பெற்றுத்தந்தோம். மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இரு மாநில உறவுகளை சிதைக்கும் வகையில் பேசி வருகிறார். டி.கே.சிவக்குமாரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகிவிடும். உணர்வுப்பூர்வமான விவாதங்களில் விரிவான கருத்து பரிமாற்றம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இதே கருத்தை பல அரசியல் தலைவர்களும் கூறி வரும் நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்னும் வாய் திறக்கவில்லை. மவுனப்புரட்சி செய்வதில் வல்லவர். எதிர்கும் பதிலளிக்கவில்லை. மேகதாது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-convene-an-all-party-meeting-immediately-edappadi-palaniswami




