டிசி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'சூப்பர்மேன்' மற்றும் 'சூப்பர்கேர்ள்' ஆகிய இரண்டு திரைப்படங்களின் உலகளாவிய மொத்த வசூலையும், 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' வெறும் நான்கு நாட்களிலேயே முந்தியுள்ளதாக கூறப்படுகிறது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவான 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம், கடந்த ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா நடித்துள்ள இந்த திரைப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஸ்பைடர்மேன் 2021-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' திரைப்படத்திற்குப் பிறகு, சுமார் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 38-வது படமாகவும், 'ஸ்பைடர்மேன்' தொடரின் நான்காவது படமாகவும் உருவாகியுள்ளது. புதிய வில்லன்கள், பிரம்மாண்டமான விஷுவல் எஃபெக்ட்ஸ், அதிரடியான சண்டைக் காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களம் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' சாதனை முறியடிப்பு இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ.72 கோடி மொத்த வசூலை ஈட்டிய 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே', இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்களின் அதிக முதல் நாள் வசூல் என்ற சாதனையை வைத்திருந்த 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. 'தி ஒடிசி' வசூலையும் முந்தியது இதனைத் தொடர்ந்து, இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'தி ஒடிசி' திரைப்படம் இந்தியாவில் இதுவரை ஈட்டிய மொத்த வசூலையும், 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' வெறும் மூன்று நாட்களிலேயே கடந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர்மேன் படங்களையும் முந்திய வசூல் மேலும், டிசி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'சூப்பர்மேன்' மற்றும் 'சூப்பர்கேர்ள்' ஆகிய இரண்டு திரைப்படங்களின் உலகளாவிய மொத்த வசூலையும், 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' வெறும் நான்கு நாட்களிலேயே முந்தியுள்ளதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, 'சூப்பர்மேன்' மற்றும் 'சூப்பர்கேர்ள்' ஆகிய இரண்டு படங்களும் சேர்த்து சுமார் ரூ.7,100 கோடி வசூல் செய்த நிலையில், 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் தற்போது ரூ.8,000 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியான சில நாட்களிலேயே உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வரும் 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே', அடுத்த சில நாட்களில் மேலும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/spider-man-surpasses-superman-a-box-office-explosion




