திருப்பதி, மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பாவின் நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தையான துறவி கவிதாயினி தரிகொண்ட வெங்கமாம்பா, பகவானின் சிறப்புகளை போற்றி பல பாடல்களை இயற்றியவர். ஏழுமலையான் கோவிலில் முதல் முதலில் அன்னதானத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இவரது நினைவு தினத்தையொட்டி திருப்பதியிலும், திருமலையிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அவ்வகையில் தரிகொண்ட வெங்கமாம்பாவின் 209-வது நினைவு தினத்தையொட்டி நேற்றும் இன்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இன்று, திருப்பதி எம்.ஆர்.பள்ளி சர்க்கிளில் உள்ள வெங்கமாம்பா உருவச்சிலைக்கு, தரிகொண்ட வெங்கமாம்பா திட்டத்தின் சிறப்பு அதிகாரி டாக்டர் வேமா வெங்கட ரத்னம் மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தரிகொண்ட வெங்கமாம்பா திருவுருவச்சிலைக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இசை நிகழ்ச்சி அன்னமாச்சார்யா கலையரங்கத்தில் இன்று காலை அன்னமாச்சார்யா திட்டக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணி முதல் ஹரிகதா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் வெங்கமாம்பா திட்டத்தின் உதவி நிர்வாக அதிகாரி அருணா குமாரி, கண்காணிப்பாளர் என்.சுசீலா, பிற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/devotional/floral-tributes-to-matrusri-tarigonda-vengamamba-on-209th-death-anniversary




