சென்னை, தெற்கு ரெயில்வே, சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கிண்டி ரெயில் நிலையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற அக்டோபர் 4-ந்தேதி வரையில் நள்ளிரவு 12.15 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையில் (2 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- மின்சார ரெயில் ரத்து சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற அக்டோபர் 3-ந்தேதி வரையில் இரவு 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து இன்று மற்றும் 28, 29, 30, அக்டோபர் 1,2,3 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-chennai-beach-tambaram-electric-train-service-3




