புதுடெல்லி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபது ஓவர் தொடங்குகிறது.இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற இந்திய அணியின் பயிற்சியின் போது இஷான் கிஷனுக்கு முதுகுப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அணியின் மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்தனர். அதன் பிறகு அவர் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபடாமல் பயிற்சிக் களத்தை விட்டு வெளியேறினார். ஆனால் தற்போது கிடைக்கும் தகவல்படி, காயம் மிகவும் தீவிரமானதாகத் தெரியவில்லை. இஷான் கிஷன் தானாகவே நடந்து வெளியேறியதாகவும், பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், முதல் போட்டிக்கு அவர் முழுமையாகத் தயாராக இருக்கிறாரா என்பது குறித்து மருத்துவக் குழுவின் கண்காணிப்பு முக்கியமாக இருக்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/indian-player-ishan-kishan-injured-during-training



