சென்னை எனது கணவரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் என லால்குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கூறியுள்ளார். சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. சட்டரீதியாக தொழில் அப்போது, தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவையில் லாட்டரி குறித்து பேசினார். இதுபற்றி லால்குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கூறும்போது, சட்டசபையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட சிலர் லாட்டரி குறித்து பேசி அவர்கள் செய்த தவறை மறைக்கின்றனர். அதற்காக லாட்டரி என தொடர்ந்து பேசி வருகின்றனர். என் கணவர் வேறு மாநிலத்தில் தொழில் செய்து வருகிறார். எந்த அரசு வந்தாலும் நாங்கள் வரி செலுத்தி வியாபரம் செய்து வருகிறோம். அண்ணா ஆட்சியில் லாட்டரி தொழில் கொண்டு வரப்பட்டது. லாட்டரி விற்பனையை கொச்சைப்படுத்துவது போன்று பேசுகிறார். நாங்கள் சட்டரீதியாக உரிமம் பெற்று தொழில் செய்கிறோம். சட்டவிரோத வகையில் லாட்டரி தொழில் எதுவும் செய்யவில்லை. எந்த அமைச்சர் கேள்வி கேட்டாரோ அவருக்கு பதில் அளிக்க வேண்டும். தேவையில்லாமல் எனது கணவரை இழுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-drag-my-husband-unnecessarily-mla-leema-rose




