புதுடெல்லி, அரசு ஆஸ்பத்திரிகளில் ரேபிஸ் தடுப்பூசி இருப்பு தொடர்பாக மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சுகாதாரத்துறை மந்திரி நட்டா நேற்று பதிலளித்தார். தடுப்பூசி தட்டுப்பாடு அவர் கூறும்போது, 'சுகாதாரம் மாநில பட்டியலில் இருப்பதால் ரேபிஸ் தடுப்பூசிகளின் கொள்முதல், வினியோகம் மற்றும் இருப்பை உறுதி செய்தல் அனைத்தும் அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சார்ந்தது. ஆனால் தேசிய அளவில் ரேபிஸ் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதற்கான எந்த தகவலும் மத்திய அரசுக்கு வரவில்லை' என்று தெரிவித்தார். எனினும் தேவை அதிகரிப்பு, கொள்முதல் தாமதம் போன்ற காரணங்களால் சில சுகாதார நிலையங்களில் தற்காலிக தட்டுப்பாடு இருக்கலாம் எனக்கூறிய நட்டா, அந்த சூழல்களை அந்தந்த மாநில-யூனியன் பிரதேச அரசுகள் கையாண்டு வருகின்றன என்றும் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/there-is-no-shortage-of-rabies-vaccine-at-the-national-level-central-government-explains




