சென்னை, உண்மையில் இது யாருக்கான ஆட்சி. எப்படி அந்தச் சிறுமிக்கு நீதி கிடைக்கும். என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். பாலியல் வன்கொடுமை இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே 10ஆம் வகுப்பு மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, மூச்சடைக்க செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இன்று முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் மதுராந்தகம் வருகிறார் என்பதற்காக, இந்த சம்பவத்தை பொய் செய்தி என கூறி, மூடி மறைக்க காவல்துறை முயற்சிப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம்சாட்டும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை, இந்த த.வெ.க. அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. யாருக்கான ஆட்சி. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதைவிட, முதல்-அமைச்சரின் வருகைக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதுதான் காவல்துறையின் முன்னுரிமை என்றால், உண்மையில் இது யாருக்கான ஆட்சி. எப்படி அந்தச் சிறுமிக்கு நீதி கிடைக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/atrocity-against-class-10-student-dmk-mp-kanimozhi-expresses-strong-condemnation




