திருநெல்வேலி, திருநெல்வேலியின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இருட்டுக்கடை அல்வாவுக்கு, 2026-ம் ஆண்டுக்கான Food Connoisseurs India Awards விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. விருது டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், “Best Sweet Shop of the Year (South)” என்ற விருதை இருட்டுக்கடை அல்வா வென்றது. இதையடுத்து, இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கவிதா சிங் விருதை பெற்றுக்கொண்டார். இருட்டுக்கடை அல்வா திருநெல்வேலியின் பாரம்பரிய சுவையை பல ஆண்டுகளாக பிரதிபலித்து வரும் இருட்டுக்கடை அல்வா, பொதுமக்களிடையே தனி வரவேற்பை பெற்றுள்ளது. அதன் தனித்துவமான சுவையும், பாரம்பரிய தயாரிப்பு முறையும் இருட்டுக்கடை அல்வாவுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தென்னிந்தியாவின் சிறந்த இனிப்பகத்துக்கான விருது இருட்டுக்கடை அல்வாவுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் திருநெல்வேலியின் பாரம்பரிய அல்வாவுக்கும், அதன் நீண்டகால பாரம்பரியத்துக்கும் மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் விருதை பெற்றுக்கொண்ட இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கவிதா சிங்குக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருநெல்வேலியின் பாரம்பரிய சுவைக்கு கிடைத்த இந்த விருது, திருநெல்வேலிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelvelis-iruttukkadai-halwa-receives-national-recognition




