ரோம், இத்தாலியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு இத்தாலி. இந்நாட்டின் தன்னாட்சி மாகாணமாக திகழும் சிசிலி தீவு மத்திய தரைக்கடலில் அமைந்துள்ளது. சிசிலி தீவில் மவுண்ட் எட்னா என்ற எரிமலை உள்ளது. ஐரோப்பாவில் செயல்பாட்டில் உள்ள எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். எரிமலை வெடிப்பு இந்நிலையில், மவுண்ட் எட்னா எரிமலை தற்போது வெடித்து சிதறி வருகிறது. எரிமலையில் இருந்து கரும்புகையுடன் நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. இதன் காரணமாக சிசிலி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/volcanic-eruption-in-italy-flight-services-disrupted




