சென்னை, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கோவில் சொத்துக்கள் கோவில் நிலங்கள் எந்த விதத்திலும் தனி நபர்களுக்கு சென்று விடாமல் இருப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும். தி.மு.க.,வின் இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு சென்று விடக் கூடாது. கரூர் மாவட்டத்தின் 15 கிராமங்களில் உள்ள, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 3,084 ஏக்கர் 95 செண்ட் திருக்கோவில் இனாம் நிலங்களை, 3,390 நபர்களின் பெயரில் பதிவு மற்றும் விற்பனை செய்யும் வகையில், பதிவு தடையை நீக்குமாறு, சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் இந்து கோவில் சொத்துகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களால் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்டு, கோவில் பெயரில் உள்ள சொத்துக்களை எந்தக் காரணத்திற்காகவும் வேறு யாருக்கும் பட்டா மாறுதல் செய்யக் கூடாது. ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பு உள்ளிட்ட எந்த வகையிலும் கோவில் சொத்துக்கள் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டியது இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பூர்வ கடமையாகும். எனவே, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்களை, தனி நபர்கள் பெயரில் பதிவு செய்ய இருக்கும் தடையை நீக்க எந்த அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் கோவில் நிலங்கள், தனி நபர்களுக்கு சென்று.விடக் கூடாது. இதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்ச ரமேஷ் அவர்களும் உறுதிப்படுத்த வேண்டும். தி.மு.க.,வின் இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு சென்று விடக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tmc-government-should-not-go-down-the-anti-hindu-path-of-the-dmk-vanathi-srinivasan




