இடைத்தேர்தல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் அனல் பறக்க அதிரடி பிரசாரம் நடத்தி, மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் மதுராந்தகம் தொகுதி கருங்குழி பகுதியில் சுகந்தியை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் மக்களிடையே பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த இடைத்தேர்தல், கடந்த பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்து விட்டு, மாற்றுக் கட்சியில் சேர்ந்து விட்டதன் விளைவாகவே நடைபெறும் திணிக்கப்பட்ட தேர்தல் இந்த இடைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெறக் கூடாது. தோற்கடிக்கப்பட வேண்டும். அவர் வெற்றி பெற்றால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ராஜினாமா செய்து, வேறு கட்சியில் சேர்வதற்கு ஊக்கமளித்து விடும்.தாராபுரம் தொகுதியிலும் த.வெ.க. சார்பில் போட்டியிடும் சத்தியபாமா தோற்கடிக்கப்பட வேண்டும். சட்டமன்றத்தை, சட்டமன்றமாக நடத்த வேண்டும் சண்டை மன்றமாக நடத்தக்கூடாது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-candidate-must-not-win-the-by-election-under-any-circumstances-cpms-shanmugam-campaigns




