நேற்று டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர் காக்ரோச் ஜனதா கட்சி. தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களது முக்கிய கோரிக்கை. நாடாளுமன்றம் அருகே பேரணி சென்றதும், காவல் துறையினர் அவர்களைக் கலைந்துபோகச் சொல்லி அறிவுறுத்தினர். போராட்டக்காரர்கள் மறுத்ததால், அவர்கள் மீது தடியடி நடத்தியது போலீஸ். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே. போராட்டம்நட்டா உடன் CJP சந்திப்பு; அமித் ஷாவை சந்தித்த தர்மேந்திர பிரதான்! நடந்தது என்ன? "எங்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும், குறிப்பாக ஆண் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் பிள்ளைகளிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் இன்னும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். டெல்லி காவல்துறையின் இந்த மனிதநேயமற்ற செயல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க நான் இன்னும் சிறந்த முறையில் செயல்பட்டிருக்கலாம். 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மரணத்திற்குப் பொறுப்பான தர்மேந்திர பிரதான் என்பவரைக் காப்பாற்றுவதற்காக, இன்னும் பல இளம் மாணவர்களின் ரத்தத்தைச் சிந்தக்கூட இந்த அரசு தயாராக இருந்தது. ஒருவேளை நீங்கள் இதில் காயமடைந்து, இந்தப் பதிவைப் பார்க்கிறீர்கள் என்றால், தயவுசெய்து எனக்கு நேரடியாகச் செய்தி அனுப்புங்கள். நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்." என்றிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/abhijit-deepke-apologises-after-police-lathi-charge-in-delhi



