தூத்துக்குடி, தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் - I தீர்ப்பளித்துள்ளது. கொலை வழக்கு தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்டுவெல் காலனி பகுதியில் வைத்து கடந்த 2017-ம் ஆண்டு, தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த ஆசிர்வாதம் மகன் அந்தோணிராஜ் (வயது 43) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி 3 சென்ட், அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் மதன்குமார்(எ) குட்டிஜேசு(39) என்பவரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை இந்த வழக்கு விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் - I (ADJ - I) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம், நேற்று (11.9.2026) மேற்சொன்ன நபரான மதன்குமார்(எ) குட்டி ஜேசு என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-murder-case-convict-gets-life-imprisonment




