சென்னை, தமிழகத்தில் எம்.பி.பி. எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கான மாணவ சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில், 614 மாணவ மாணவியருக்கு, மருத்துவ படிப்பு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- படிப்புக்கான மருத்துவ கலந்தாய்வில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 510 மாணவர்களுக்கு எம். பி.பி.எஸ். இடம், 104 மாணவர்களுக்கு பி.டி. எஸ்., இடம் என, மொத்தம் 614 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ கல்லுாரிகள் எம்.பி.பி.எஸ்., படிப்பை பொறுத்தவரை, 323 மாணவர்களுக்கு அரசு கல்லுாரிகள், 12 பேருக்கு இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகள், 166 பேருக்கு தனியார் மருத்துவ கல்லுாரிகள், 9 பேருக்கு நிகர் நிலை பல்கலையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பி.டி.எஸ்., பொறுத்தவரை படிப்பை 16 பேருக்கு அரசு கல்லுாரிகளிலும் 88 பேருக்கு தனியார் மருத்துவ கல்லுாரிகளிலும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய சிறந்த மாணவர்கள், மருத்துவ கல்வி பெறுவதற்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழிகாட்டுதல் மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி ஆகியவற்றை வழங்குவதன் வழியே, பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளை தொடர்ந்து வலுப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/75-percent-internal-quota-for-government-school-students-614-medical-seats




