நெல்லை, நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் சாலையில நடந்து சென்ற ஒரு தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தொழிலாளியிடம் பணம் பறிப்பு நெல்லை பாளையங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 43). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள டீக்கடை அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் சங்கரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்ததாக கூறப்படுகிறது. 2 வாலிபர்கள் கைது இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த சந்துரு(26), வேல்முருகன்(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/2-arrested-for-threatening-and-extorting-money-from-a-worker-at-knifepoint




